அறிவும் அறியாமையும்

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
FormatPaper Pack
Pages 112
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பணம், பதவி, பட்டம் என்று பல, தம்மை நாடி வந்த போதும் அவற்றை ஏற்காமல், எவர்க்கும் அஞ்சாமல், தமிழ், தமிழர், தமிழ் நாட்டு உரிமை மீட்புக்குரிய கருத்துகளைப் பரப்பிப் போராடியவர்; அக் கொள்கை களுக்காகவே தம் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்டார். அவற்றுக்காகவே பதினெட்டு முறை சிறை புகுந்தவர் அவர். 'தென்மொழி என்னும் தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழையும், 'தமிழ்ச்சிட்டு' என்னும் மாணவர் சிறுவர் இதழையும், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காகத் தமிழ்நிலம்' என்னும் இதழையும் நடத்தினார். அவர் இயற்றிய 'மகபுகு வஞ்சி'யும் 'எண்சுவை எண்பதும் தமிழிலக்கியங்களில் வஞ்சிப்பா வகையிலும் சிந்தியல் வெண்பா வகையிலும் முதல் நூல்களாகும். ஆறாம் வகுப்பில் பயின்றபோதே கையெழுத்து இதழ் நடத்தினார்; பதினான்கு அகவையிலேயே 'கொய்யாக்கனி' என்ற பாவியத்தைப் படைத்தார். தமிழ்மொழி. இன, நாட்டு முன்னேற்றம் சார்ந்த ஆயிரக்கணக்கான பாடல்களை இயற்றினார். ஆகவே, தமிழ் கூறும் நல்லுலகு அவரைப் 'பாவலரேறு' எனச் சிறப்பித்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :