அறியப்படாத தமிழகம்

ஆசிரியர்: தொ. பரமசிவன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 135
ISBN978-81-89359-72-0
Weight150 grams
₹75.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாசிக்கவும், தொடர்ந்து வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்துபோன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவது போலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான். இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் 'தம்மளவில் முழுமையானவை' என நான் கூறவரவில்லை . இவை சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வைவிட ' விற்பனை உணர்வே' சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது ‘விஞ்ஞானக் கண்ணால்' திரைப் படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன் ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன்.
வேரைத் தாங்கும் மண்ணை இழந்த ஆற்றங்கரை அரச மரத்துக்குக்கூட மறுவாழ்வு உண்டு. நோய் தாக்கிய வேர்களுக்கு மருந்து இல்லாமல் வாழ்வில்லை. மண் எப்பொழுதும் வளமானது தான். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் தாம் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பரமசிவன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :