அறிஞர் நா.மம்மது
ஆசிரியர்:
ஆ.ஷைலா ஹெலின்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81?id=1018-0711-5329-5886
{1018-0711-5329-5886 [{புத்தகம்பற்றி நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் தற்பொழுது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். ஏழு ஆண்டுகள் கோவை, ஈரோடு, திருவனந்தபுரம் ஆகிய பள்ளிகளில் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்ததோடு, திருமணத்தின் நிமித்தம் திருவனந்தபுரத்திற்குப் புலம்பெயர், கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுகலை பட்டம் பெற்று, அப்பல்கலைக்கழகக் கல்லூரிதமிழ்த்துறைமுனைவர் எஸ்.இராஜேந்திரன், இசைத்துறைமுனைவர் பி.புஷ்பா அவர்களின் தலை மையின் கீழ் ஆய்வாளராக இருந்து வருகிறார்.
<br/>} {பதிப்புரை கலைஞன் பதிப்பக வைர விழாவை முன்னிட்டு “தொல் காப்பியம் முதல் பாரதி வரை யிலான 120 தலைப்புகளில் 60 பேராசிரியர்கள் எழுதிய நூல்கள் இந்திய ஆய்வியல்துறை, மலாயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோலாலம்பூர் மலேசியாவில் நடைபெற்ற 9ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் டத்தோ ஸ்ரீ உத்தமா ச.சாமிவேலு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 60 எழுத்தாளர்களின் படைப்புகளை இந்திய ஆய்வியல்துறை, மலாயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலேசியாவில் வெளியிட அன்றைய துறைத் தலைவர் முனைவர் கிருஷணன் மணியம் அவர்கள் தலைமையில் புதிய புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டோம். தொண்டாற்றிய பல தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்க்கையையும், படைப்புகளையும் இன்றைய மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய ஆவணப்படுத்தும் முயற்சியாக தமிழ்த்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். எங்களின் அனைத்து முயற்சிக்கும் துணைநின்ற முனைவர் அரங்கபாரி, முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் அபிதா சபாபதி மற்றும் புத்தகங்கள் எழுதிய அனைத்துப் பேராசிரியர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866