அறிஞர் அண்ணா
ஆசிரியர்:
என்.ரமேஷ்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE?id=1546-4007-3922-2676
{1546-4007-3922-2676 [{புத்தகம் பற்றி அறுவை சிகிச்சையை முடித்த மருத்துவர் அண்ணாவிடம், “இனி நீங்கள் அதிகம் பேசக் கூடாது, ஓடியாடி வேலை செய்யக் கூடாது; நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
<br/> அண்ணா அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு நவம்பர் 6ஆம் நாள் இந்தியா வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாவைக் காண மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. அண்ணாவைக் கண்ட மக்கள், "அண்ணா ! அண்ணா !” என்று குரல் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மக்களின் அன்பைக் கண்ட அண்ணாவின் மனம் நெகிழ்ந்தது.
<br/> 'என் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் இந்த மக்களுக்காக உழைக்கக் கூடாது என்றால், இந்த உடல் எனக்கு எதற்கு?' என்ற எண்ணம் அவருள் எழுந்தது. அண்ணா மருத்துவரின் அறிவுரையை மறந்தே போனார். மீண்டும் தன் நலிவுற்ற உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைக்கத் தொடங்கிவிட்டார். பெயரளவில் பொதுக்கூட்டங்களில் பேசுவதைக் குறைத்துக் கொண்டாலும், அவர் தனது அரசு அலுவல்களைத் தொடர்ந்து ஆற்றியே வந்தார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866