அறிஞர் அண்ணாவின் வாழ்வும் தொண்டும்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரி நிலையம்
FormatPaper Back
Pages 98
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தென்னகத்தின் திருவிளக்காய்த் தீந்தமிழர்தம் குல விளக்காய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணாதுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மேதை; மடமை என்னும் காரிருளைக் கிழித்து அறிவொளி பரப்பிய ஞாயிறு ; சோர்ந்து கிடந்த தமிழினத்தைத் தம் சொல்லாலும் எழுத்தாலும் தட்டி எழுப்பித் தன்மான உணர்ச்சியை ஊட்டியவர்; தமிழ் மக்கள் யாவரும் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டியவர்; அவருடைய வாழ்க்கையே ஒரு சிறந்த காவியம் ஆகும்.
"தொண்டை நன்னாடு சான்றோருடைத்து'' என்பது ஔவையின் அமுதமொழி. அந்தத் தொண்டை நன்னாட்டில் சிறப்புற்றுத் திகழும் நகர்களுள் ஒன்று தான் காஞ்சிபுரம். அதனைக் காஞ்சி என்றும், கச்சி என்றும் வழங்குவர். இன்று செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் காஞ்சிபுரம், பண்டைக் காலத்தில் பல்லவ மன்னர்களின் தலைநகராய்த் திகழ்ந்தது. கோவில்கள் பல அமைந்துள்ள காஞ்சிபுரம், நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் புகழ்ந்து பாடப்பெற்ற பழம்பதியாகும். முன்னாளில் சைவம், வைணவம், புத்தம், சமணம் ஆகிய சமயங்களைப் பேணிக் காத்த பெருமையும் அந்நகரைச் சேரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

வாழ்க்கை வரலாறு :

பாரி நிலையம் :