அறம் வளர்த்த நாயகி அன்னை ஸ்ரீ காஞ்சி காமாட்சி

ஆசிரியர்: கி.மஞ்சுளா

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹65.00 ₹55.25    You Save ₹9
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மங்கள ஸ்வரூபனாகிய சிவன் எனும் மஹாதேவனும் ஆற்றல் மயமான (பரா) சக்தியுடன் கூடியவராக இருந்தால் மட்டும் பிரபஞ்சத்தை ஆளுவதற்கு (தோற்றுவிப்பதற்கு) சக்தி உடையவராகிறார். அவ்வாறு உன்னோடு கூடியிராவிட்டால் அசையக் கூடத் திறனுள்ளவராக அவர் இருப்பதில்லையன்றோ ? ஆகையால் ஹரி, ஹரன், பிரம்மன் என்ற மும்மூர்த்திகள் முதலானோராலும் வழிபடப் பெறும் உன்னைப் பூர்வ புண்யம் செய்யாதவன் நமஸ்கரிக்கவோ, துதிக்கவோ எங்ஙனம் தகுதியுள்ளவனாவான்? என்று ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரி முதல் பாடலிலேயே அன்னையைப் போற்றியுள்ளார். மேலும்,
"வேதங்கள் ஒன்றிற்கும் புலப்படாத குணங்களை உடையவளே! எல்லா வேதங்களையும் பிறப்பித்த தாயே! நீ தர்மங்களை ஏற்படுத்தியவளாக இருக்கிறாய். உன்னாலேயே இந்த இந்திரஜாலம் போன்ற உலகம் படைக்கப்பட்டது. தாயே! வெகுகாலமாக மிகவும் சோர்வடைந்தவனும், அறியாமையாகிய கயிற்றால் கட்டப்பட்டவனுமான, என்னைக் கரையேற்றுவதற்கு நீ ஒருத்தியே திறமையுள்ளவள்” என்றிறைஞ்சுகிறார். பராசக்தியே பரப்பிரும்மம் என்று கூறுவதற்கு ஆதிசங்கரர் அருளிச் செய்த சௌந்தர்யலஹரியை விட வேறொரு நூல் இனி தோன்ற முடியாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :