அரசியல் வானில் கலையரசி ஜெயலலிதா

ஆசிரியர்: அருண் ராதிகா

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-935681-8-7
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி. கிரியின் மகன் சங்கர் கிரி தான் தயாரிக்க இருந்த ஆங்கில ஆவணப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.அந்த வாய்ப்புக்கு ஜெயலலிதாவை சங்கர் கிரியிடம் ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சோவும் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து சங்கர் கிரி சற்றும் தாமதிக்காமல் உடனே சந்தியாவைச் சந்தித்து ஜெயலலிதாவை தனது படத்தில் நடிக்கக் கேட்டுக் கொண்டார்.ஆங்கிலப் பட வாய்ப்பு, அதுவும் குடியரசுத் தலைவரின் மகன் தயாரிக்கும் படம் என்பதால் தனது மகளுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார் சந்தியா.
படிப்புதான் முக்கியம் என்பதால் அதற்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் படப் பிடிப்பில் பங்கேற்றார் ஜெயலலிதா.1961-ம் ஆண்டு எபிசில் (EPISTLE) ஆங்கிலப் படம் மூலம் திரை உலகில் காலடி வைத்த ஜெயலலிதாவை அந்தக் கனவுலகம் முழுமையாக வசப்படுத்திக்கொண்டது. ஆனால் அந்த ஆங்கிலப் படம் அவருக்கு எந்தப் பாராட்டையும் பெற்றுத் தரவில்லை...

உங்கள் கருத்துக்களை பகிர :
அருண் ராதிகா :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :