அயோத்தியா காண்டம் பாகம்-2

ஆசிரியர்: எம்.நாராயண வேலுப்பிள்ளை

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 404
First EditionAug 1998
3rd EditionSep 2007
Weight600 grams
Dimensions (H) 23 x (W) 16 x (D) 3 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"வேதார்த்தம் அறுதியிடுவதும் ஸ்மிருதி, இதிகாச புராணங் களாலே; இவை இரண்டிலும் வைத்துக்கொண்டு இதிகாசம் பிரபலம்; அத்தாலே அது முற்பட்டது" என்பன ஸ்ரீவசன பூஷணத்தின் அருமையான வசனங்கள் ஆகும். 'வேதங்களின் கருத்தை ஆராய்ந்து கூறுவன ஸ்மிதி, இதிகாசங்கள், புராணங்கள் என்பவையாகும். அவைகளில் இதிகாசங்கள் ஏனையவற்றைவிட மேலானவை; இந்தக் காரணத்தாலே வேதங்களின் கருத்துக்களை அறுதியிட்டுக் கூறுவதற்கு இதிகாசங்கள் முக்கியமாய் முதலாவதான ஆதாரமாகக் கருதப்படும்' என்பன இவ்வசனங்களுக்குரிய விளக்கமாகும். இத்தகைய பெருமை வாய்ந்த இதிகாசங்கள் இரண்டாம். அவை (1) இராமாயணம் (2) மகாபாரதம்.
இராமாயணம் சிறையிருந்தவள் ஏற்றத்தைச் சொல்லுகின்றது. திருமாலின் திரு அவதாரமான இராமபிரானின் பெருமையை எடுத்துக்கூறுகின்றது. மகாபாரதமோ, தூது போனவனாகிய கண்ண்னின் ஏற்றத்தைக் கூறுகின்றது. இராமாயணம் காலத்தால் மகாபாரத்தை விட முந்தியதாகும். ஆகையால் இதனை 'ஆதிகாவியம்' என்பர். வான்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இக்காவியம் இந்நாட்டில் மட்டுமின்றி, கீழ்த்திசை நாடுகளிலும் பரவியிருந்ததாகப் பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. இந்திய மொழிகளுள் இதுவே தொன்மையான இலக்கியமாக அமைந்துள்ளது; உலக மொழிகள் பலவற்றில் இச்சரிதம் மொழிபெயர்க்கப் பெற்றுப் பல்வேறு நாட்டைச் சேர்ந்த

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.நாராயண வேலுப்பிள்ளை :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :