அம்மாவின் தேன்குழல்

ஆசிரியர்: மாதவன் இளங்கோ

Category சிறுகதைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-930018-9-9
Weight150 grams
₹130.00 ₹110.50    You Save ₹19
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எழுத்துக்குள் கிடைக்கிற உள்ளொளிக்கான தரிசனமே என்றென்றும் அதை நம்மோடு தக்க வைத்திருக்கிறது. எல்லாமே பொருள்மயமாகிவிட்ட சூழலில், இருந்ததற்கான எந்தச் சுவடுகளுமின்றி வாழ்க்கை முறையும், பண்பாடும், மனித நேயமும் நம் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாய் கை நழுவிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இழந்து கொண்டு வருபவை குறித்த அகத்துயரம், மனித நேயம், புலம் பெயர் வாழ்க்கையின் கற்பிதங்கள், அகப் சிக்கல்கள், உள்ளாழ்ந்த அன்போடு ஸ்பரிசிக்கிற விரல் நுனிகளில் கிடைத்துவிடுகிற இதம், மொழி, நிற பேதங்களற்று வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்ற எளிய , 11{தார்த்தத்தின் உணர்தல் இவையே மாதவன் இளங்கோவின் படைப்புகளின் பேஃமொழி.காலத்தின் விளிம்பில் அமர்ந்து வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் தொனியில் தன்போக்கில் தானாகவே எழுதிச் செல்கின்றன இவரது கதைகள், பூடகத் தன்மையற்று நேரடியாக உணர்வுக் கடத்துதலை நிகழ்த்தி, வாசிக்கையில் கிளை நுனியிலிருந்து விழத் தளும்பும் கடைசி மழைத் துளி போலாகி பதற்றமுறுகிற மனக்குலைவுகளை சமன்படுத்துவதிலும், உலுக்கி உள்ளதிரச் செய்வதிலும் கதையோட்டம், கதை சொல்கிற உத்தி, மனத் ததும்பல்களை உணர்வுகளாகக் கடத்துதல், முற்றிலும் புதிய கதைப் புலக்காட்சி என எல்லாவிதத்திலும் முதல் தொகுப்பு என்ற அடையாளமற்றும் நேர்த்தியான விவரணையில் சிறப்புறச் சொல்லியிருப்பது மாதவன் இளங்கோவின் வெற்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

அகநாழிகை பதிப்பகம் :