அமைப்பாய்த் திரள்வோம் (கருத்தியலும் நடைமுறையும்)

ஆசிரியர்: தொல்.திருமாவளவன்

Category கட்டுரைகள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatHardbound
Pages 520
ISBN978-93-85125-80-5
Weight600 grams
₹450.00 ₹405.00    You Save ₹45
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மக்களுக்காக அமைப்பைக் கட்டுதல், மக்களை அமைப்பாய்த் திரட்டுதல் என்னும் மகத்தான கடமையை நிறைவேற்ற, இத்தொகுப்பு வீரியம் மிக்க உந்துதலையும், வேகம் நிறைந்த வாக்கத்தையும் அளிக்கும் என்று பெரிதும் நம்புகிறேன். இது விடுதலைச் சிறுத்தைகளுக்காக மட்டுமின்றி, அனைத்து இயக்கங்களின் பார்வைக்கு, களத்திற்கு, புரட்சிகர மாற்றத்திற்கு முன்வைக்கப்படுகிறது.
தலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளிவர்க்கத் தத்துவத்தின் நட்சயே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார். உமைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்விவாதிக்க வேண்டும்: பயன்பெற வேண்டும்.
இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர் திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மியளவும் மீறாமல் அந்த வதப்படி வினையாற்றும் வித்தகத்தைப் பார்த்து மலைத்துப் போகிறேன், அவரது வித்தகத்துக்கான சான்று இந்தப் புத்தகமே ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தொல்.திருமாவளவன் :

கட்டுரைகள் :

நக்கீரன் பதிப்பகம் :