அப்பாவின் சிநேகிதர்

ஆசிரியர்: அசோகமித்திரன்

Category சிறுகதைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatPaperback
Pages 208
ISBN978-93-82648-60-4
Weight300 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஓர் எழுத்தாளனின் படைப்பு களில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்பு களில் இடம்பெறுமா? இப்படைப்புகளே சுயசரிதைதானோ? இதற்கு ஆமாம் & இல்லை என்று ஒரு சொல்லில் பதில் தந்துவிட முடிவ தில்லை. எங்கள் பக்கம் இல்லை என்றால் நீங்கள் எதிரிப் பக்கம் என்று குழுக்களாக இயங்குபவர்கள் நிலைமையை எளிமைப்படுத்திவிடலாம், ஆனால், யதார்த்தம் எளிமையானதல்ல. இத்தொகுதியிலுள்ள பல கதை களின் பல பாத்திரங்களுக்கு நிஜ வாழ்க்கையில் ஆதார மனிதர்கள் உண்டு. ஆனால், இக்கதைகள் அந்த மனிதர்களின் கதைகளல்ல. இந்த அளவுக்கு நான் சொல்ல முடியும்; இவர்களை நான் அறிவேன்; இவர் களுக்கு நன்றி செலுத்துவதும் என் கதைகளின் ஒரு நோக்கம் ஆகும். இக் கதைகளை மிகுந்த பிரயாசைப்பட்டுத்தான் நான் எழுதினேன் என்றாலும், இக்கதைகளை எழுதியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
அசோகமித்திரன் :

சிறுகதைகள் :

நற்றிணை பதிப்பகம் :