அபலையின் கண்ணீர்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category நாவல்கள்
FormatPaper back
Pages 100
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எனக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம் உண்டு என்பது நேயர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். உதாரணமாக, எனக்குப் பெயர் வைத்து நாற்பது வருஷத்துக்கு மேல் ஆயிற்று. ஆயினும் என்னுடைய பெயரை இன்னும்ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறேன்! என்னுடைய இளம் நண்பர் ஒருவர் எட்டு வருஷத்துக்கு முன்னால் பழக்கமானார். இரண்டாவது தடவை அவரைச் சந்தித்தபோது, "என்ன மிஸ்டர் துரைசாமி! சௌக்கியந்தானே?" என்று கேட்டேன். "சௌக்கியந்தான். ஆனால் என் பெயர் துரைசாமி இல்லை; முத்துசாமி!" என்று அவர் சொன்னார். அப்புறம் நூறு தடவைக்கு மேல் என்னுடைய ஞாபகத்தை அவர் மாற்ற முயன்றும் பயன்பட வில்லை. கடைசியில் அந்த மனிதர், "முத்துசாமி” என்று பெயர் எழுதிய அவருடைய பௌண்டன் பேனாவை என்னிடம் ஞாபகார்த்தமாகக் கொடுத்து விட்டுப் போன பிறகுதான் பழைய, "துரைசாமி" என்ற பெயரால் அவரை அழைப்பதை நிறுத்தினேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

நாவல்கள் :

பாரதி பதிப்பகம் :