அன்வர் பாலசிங்கத்துடன் நேர் முகம்

ஆசிரியர்: டி.எம்.உமர் பாருக் தமிழில் : மு.குலாம் முஹம்மத்

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 44
First EditionApr 2016
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

டி.எம். உமர் பாரூக்
ஜனாப் மைதீன், என்பவரைச் சந்தித்தப் போது தனது தந்தை மர்ஹும் இஸ்மாயில் மீரான் மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியபோது போலீசார் வெடிகுண்டு வழக்குப் போட்டு அவரைச் சிறையில் அடைத்து இரண்டு ஆண்டுகள் கொடுமைப்படுத்திய தாகவும், தனது ஒரே மகளை நல்ல ஈமான்தாரிக்குத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தன்னைத் கேட்டுக் கொண்டதாகவும் அண்மையில் இஸ்மாயில் காலமாகி விட்டதாகவும் தன் தந்தையின் வேண்டுகோளின் படி தன் தங்கைக்கு அண்மையில் நல்ல ஈமான் தாரியைத் திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார்.தற்கொலை பற்றி மைதீனைக் கேட்டபோது 1981ல் (இஸ்லாத்தை ஏற்றபோது பசியும், பட்டினியுமாய் கிடந்தோம். எவ்வளவோ துன்பங்களை எதிர் கொண்டோம். அப்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளாத நாங்கள் இப்போது மச்சு வீடு, மாடி வீடுகளில் அல்லாஹ்வின் கிருபையாலும் எங்கள் முன்னோர்கள் (1981 இல் மத மாற்றத்தின் போது செய்த தியாகத்தாலும் நல்ல வாழ்க்கை வாழ்கிறோம். இந்த நேரத்தில் அல்லாஹ்வுக்கு விரோத மான காரியங்களைச் செய்வோமா? என்று கேட்டார்.
உரையில் ஒரு கவலைத் தொனித்ததை நான் உணர்ந்தேன். ஏனெனில் அவர் “தீண்டத்தகாத மக்களுக்கு எல்லா வாயில்களும் அடைக்கப்படும் போது, இஸ்லாம், அவர்களை தீண்டாமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். அதுவும் பாழ்பட்டுப் போனது” என்றார் கவலையோடு. ஏற்கெனவே இப்படி ஒரு நூல் புழக்கத்தில் இருப்பதாக தாருல் இஸ்லாமின் செயல்வீரர், தம்பி திருப்பூர் காதர் அவர்கள் என்னுடைய பார்வைக்கு கொண்டு வந்திருந்தார். ஒசூர் நிகழ்ச்சி அந்த நூலை உடனேயே நாம் படித்தாக வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திற்று. நூலை வாங்கிப் படித்தேன். 1981 இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கிராமம் நெல்லை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம். இப்போது ரஹ்மத் நகர் இதனை மையமாகக்கொண்டு தான் கதை எழுதப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :