அன்புள்ள மாணவனே

ஆசிரியர்:

Category
Publication விஜயா பதிப்பகம்
Pages N/A
Weight250 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




நமக்காக நாம் சிருஷ்டிக்கும் உலகம் முக்கியம். நீங்கள் கண்ணால் பார்க்கும் உலகத்தைவிட அழகான ஒன்றை உங்களால் செதுக்கி கொள்ள முடியும். அந்த உலகத்தில் உங்கள் நோக்கங்கள் பூக்களாகட்டும். உங்கள் இலக்கு வேர்களாகட்டும். உங்கள் முயற்சி பாதையாகட்டும். நாம் சமைக்கும் உலகத்தில் நம்மைப் பரிகசிக்கும் யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. அந்த அழகிய உலகிற்கு உங்களையும் அழைத்துச் செல்லப்போகிறேன்.
அங்கு நாமெல்லாம் நிறைய பேசப் போகிறோம். அந்த உரையாடலில் நம்மையும் அறியாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் அச்ச இருள் தானாக விலகும். வாழ்க்கை நம்பிக்கைக்குரியதாக மாறும். தினம் தினம் நாம் என்ன செய்வது என்பதை வரையறுத்து அதை நோக்கி விழிப்புணர்வுடன் பயணம் செய்யப் போகிறோம். நாம் வைக்கும் அடி அன்றைய இலக்கோடும், வாழ்க்கையின் நோக்கத் தோடும் இயைந்துவிட்டால் அதுவே வெற்றிக்கான சூத்திரமாகிவிடும். யாருடைய வாகை மந்திரமும் நமக்கு ஏற்றதாக இருக்கப்போவுதில்லை. கைரேகையைப்போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை அவசியமாகிறது. இனி நீங்கள் என்னோடு பயணப்படப் போகிறீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
விஜயா பதிப்பகம் :