அன்புக்குறிய யானைகள்

ஆசிரியர்: யுகியோ சுசியா தமிழில் : கொ.மா.கோ.இளங்கோ

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 32
First EditionDec 2017
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹30.00       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


யுகியோ சுகியா, 1904ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர். 150 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியவர். 1951 ம் ஆண்டு இவர் எழுதிய 'அன்புக்குரிய யானைகள்', போருக்கு எதிரான உண்மைகளையும், விலங்கு வதைக்கு எதிரான செய்திகளையும் குழந்தைகளுக்குச் சொல்லும் மிகச் சிறந்த படைப்பு ஆகும்.ஜப்பான் உயிரியல் பூங்கா ஒன்றின் மூன்று யானைகளின் உண்மை வரலாறு. டோக்கியோ நகரில் அணுகுண்டு வீசப்பட்டபோது, உயிரியல் பூங்காவுக்குச் சொந்தமான ஜான், டோக்கி, வான்லி ஆகிய யானைகள் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டன. கடைசி மூச்சைநிறுத்தப்போகிற நேரத்திலும் தாங்கள் கற்றுக்கொண்ட பன்ஷாய்' வித்தையை செய்து காண்பித்தபடி உயிர்விட்டன என்ற கதையைக் கேட்பவர்கள் கண்களில் கண்ணீர் கசியாமல் இருக்க முடியாது. தெரிந்தோ தெரியாமலோ பல நூற்றாண்டுகளாய் நம்மை சுற்றி இருக்கும்விலங்கினங்களை தினந்தோறும் தண்டித்துக் கொண்டிருக்கிறோம்.இந்தக் கதையை வாசிக்கும் சிறுவர்கள் விலங்குகள் வதைக்கு எதிராக குரல் எழுப்புவார்கள்என்ற நம்பிக்கை எமக்கும் எழுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :