அன்பின் ஆறாமொழி

ஆசிரியர்: முபீன் சாதிகா

Category கவிதைகள்
Publication பாலம் பதிப்பகம்
Pages N/A
$3      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழில் கவிதையாக இப்போது அறியப்பட்டவற்றை விலக்கித் தள்ளிவிட்டு, சங்ககால மொழிநடையை தற்போதைய சமூக உணர்விற்குள் கொண்டுவருகின்றன இக்கவிதைகள். இவைகளில் காணப்படுவது ஒரு வகை விளையாட்டு. ஒரு குழந்தைமையின் தன்மையில் வெளிப்பாடு கொள்ளும் இதனை இன்றைய நவினத்துவ வாழ்வில் ஏற்பட்ட அயற்சி மற்றும் பரோனியாவை நிகழ்த்திக் காட்டும் ஒரு பகடியாகக் கொள்ளலாம். ஒருவகையில் இக்கவிதைகள் பின்நவீன-பரோடி எனலாம். இப்படியாக இக்கவிதைகளின் வாசிப்பு நாம் ஒரு பாலைவனத்தில் திக்கற்று எல்லைகளை வரைந்து செல்வதைப் போல செல்கின்றது.முபீன் சாதிகா தமிழில் ஆய்வுப்பட்டயம் முடித்து ஊடகத்துறையில் பணிபுரிந்திருக்கிறார். தமிழ் சிற்றிதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளையும் புனைவுகளையும் எழுதிவருகிறார். அன்பின் ஆறாமொழி தமிழில் வெளிவரும் இவரது முதல் தொகுப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :