அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்

ஆசிரியர்: தமிழாக்கம்:ஸ்ரீமதி சரோஜா கிருஷ்ணன், நிரஞ்சன்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 454
ISBN978-81-88225-85-9
Weight600 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்" என்ற இந்நூலின் ஆசிரியரான தேவராஜ முதலியார் தனது 13வது வயதிலேயே ஸ்ரீ பகவானை விருபா குகையில் தரிசித்தவர். சித்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் 1930களில் ஸ்ரீ பகவானிடம் மிகவும் ஈடுபாடு கொண்டு 1942 முதல் பல ஆண்டுகள் ரமணாச்ரமத்திலேயே வசித்து வந்தார். ஸ்ரீ ரமண அரசவையில் மொழிபெயர்ப்பாளராக விளங்கிய முதலியாரது ரமண நினைவுகள் 1960இல் My Recollection of Sri Bhagavan என்று பதிப்பிக்கப்பட்டு "தாயும் நீயே தந்தையும் நீயே" என்று தமிழில் 1999இல் வெளியிடப்பட்டது. ஸ்ரீ பகவானது உபதேசங்களை இவர் சுருக்கமாக Gems from Bhagavan என்றும் எழுதியுள்ளார். ஸ்ரீ பகவானிடம் ஒரு குழந்தையின் உரிமையுடன் பழகி வந்த முதலியார். பல சாதகர்களின் ஆன்மிகக் கேள்விகளுக்கும் தனக்கே ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் ஸ்ரீ பகவான் அளித்த விளக்கங்களைத் தனது குறிப்பேட்டில் எழுதி வந்தார். இவை ஆங்கிலத்தில் Day by Day with Bhagavan என்று 1952இல் புத்தகமாக வெளியிடப்பட்டு தற்போது தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆன்மிக சாதனையில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான சந்தேகங்களும் அதற்கான விரிவான விளக்கங்களும் இந்நூலில் எங்கும் பரந்து கிடக்கின்றது. மேலும் ஸ்ரீ பகவானது சரள சுபாவம் அளவிடற்கரிய அவரது ஆன்மிக கம்பீரம், கருணை மற்றும் நகைச்சுவை ஆகியவற்றையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. “அனுதினமும் ஸ்ரீ பகவானுடன்” என்ற இந்நூல், ஆன்மதாகங் கொண்ட அனைவரும் பரம்பொருளாகிய பகவானுடன் ஒவ்வொரு நொடியும் வாழ வழிவகுக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :