அத்தைமகன்

ஆசிரியர்: மு. தங்கராசன்

Category உரைநடை நாடகம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 102
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டாம் ஆண்டு, முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் கவிஞர்களிடம் கவிதைகளைப் பெற்று, "கவிக்குலம் போற்றும் தமிழவேள்” என்னும் தலைப்பில், "பாத்தொகுப்பு நூல்” ஒன்ற வெளியிட்டு, தலைவர் தமிழவேள் அவர்களுக்கு, "மரியாதைக் கடன்” ஆற்றிய பிறகே, என்னுடைய இலக்கியப் படைப்புகளை வரிசை வரிசையாக நூல் வடிவம் பெறச் செய்தேன்.
கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைத் தொகுப்பு நூல்கள் உருவாக்கம் பெறச் செய்துள்ளேன். இயல், இசை என இருவகையானும் நூல்கள் ஆகிவிட்டன. "நாடகம்” எனும் தமிழிலும் நூல்கள் வெளியீடு செய்துவிட்டால், "முத்தமிழ்ப்” படைப்புகளிலும் கால் பதித்திருக்கும் ஓர் ஆத்ம திருப்தி ஏற்படும். என்னுடைய நாடகப் படைப்புகளில் ஆறு நாடகங்களை மட்டும் எடுத்து, தனித்தனி நாடகங்களாகப் பகுத்து வைத்து, "எதிரொலி, வானவில், அத்தைமகன், தியாகச்சுடர், மணமகன் யார்?, ஏணி(னி)ப் படி” என்னும் தலைப்புகளில் ஒரே சமயத்தில் வெளியிட்டு என் ஆதங்கத்தை நிறைவேற்றி மகிழ்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உரைநடை நாடகம் :

கௌரா பதிப்பக குழுமம் :