அத்திமலைத்தேவன் பாகம் 4
ஆசிரியர்:
காலச்சக்கரம் நரசிம்மா
விலை ரூ.450
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+4+?id=1822-5647-9928-1683
{1822-5647-9928-1683 [{புத்தகம் பற்றி அத்திமலைத்தேவன் சரித்திர புதினத்தின் மூன்று பாகங்களையும் படித்துவிட்டு, அலைபேசியின் மூலமாகவும், தொலைபேசியின் வாயிலாகவும், மின்னஞ்சல்களிலம் என்னுடன் தொடர்புகொண்டு பேசியவர்கள், பிரமிப்புடன் என்னிடம் கூறிய கருத்து, 'நகரேஷு காஞ்சி' என்று அறிந்திருக்கிறோம். ஆனால் காஞ்சியின் ஒவ்வொரு கல்லுக்கும் பின்பாக இவ்வளவு சரித்திரங்களா! என்று மலைத்துப் போகிறார்கள். அத்திமலைத்தேவன் மூன்று பாகங்களையும் படித்துவிட்டு, கவசம் டிவியைச் சேர்ந்தவர் கள் ஒரு பத்து பகுதிகளாக அத்திமலைத்தேவனின் சரித்திரம் குறித்த எனது நிகழ்ச்சியினை ஒளிபரப்பினார்கள். அதன்பின் எனக்கு வந்த அலைபேசி அழைப்புகள் ஏராளம். அத்திவரதன் வெளிவந்த ஒன்பதாம் நாள் நான் அவனைத் தரிசித்தேன். அவனைக் கண்டதும் எனது மேனி சிலிர்த்தது. அஸ்வத்தாமா துவங்கி இன்றைய தலைவர்கள் வரை எத்தனை பேர் அவனைத் தரிசித்திருக்கின்றனர். எத்தனை போர்களை அவன் பார்த்திருக்கிறான். ஒன்பது அடி மேனிதான். ஆனால் பாரதச் சரித்திரம் முழுவதும் அல்லவா வியாபித்து நிற்கிறான். மனமுவந்து இந்த எளியவன் எழுதும் புதினத்தின் கதை நாயகனாகத் திகழ சம்மதித்த அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அடுத்த முறை அவன் வரும்போது அவனைக் காண நான் இருக்க மாட்டேன் என்றாலும், எனது புதினத்தை 2059-னில் வாசித்தவர்கள் அவனைத் தரிசிக்கச் செல்வார்கள் அல்லவா..?
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866