அத்திப்பூ

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 152
First EditionNov 2002
4th EditionOct 2019
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
வானம் முழுவதும் வெளிச்சம் பரவ இன்னும் சில நொடிகளே இருந்த நேரத்தில் தாமோதரன் சாவியைத் திருப்பி வண்டியைக் கிளப்பினான். வண்டி மெல்லிய அதிர்வோடு நான்கு சக்கரங்களில் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழங்களை அழுத்தி நசுக்கி விதைகளை சிதறடித்தது.
வண்டியில் இருந்தபடியே எலுமிச்சை பழங்கள் நசுங்கு வதை தாமோதரன் உணர்ந்தான். சந்தோஷமானான்.
கடவுளே... உயிர்ப்போடு இருக்கின்ற பழங்களை பலி கொடுத்து விட்டேன். வேறு எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் எங்கள் பிரயாணம் அமையட்டும் என்று வேண்டிக் கொண்டான்.
வண்டி நகர்ந்தது. அந்த பெரிய ஹோட்டலை விட்டு வெளியே வந்தது. நெடுஞ்சாலைக்குத் திரும்பியது. காலியாக இருக்கின்ற அந்த நெடுஞ்சாலையில் விரைவாக பயணித்தது. எதிரே இன்னும் சில நொடிகளுக்கு எவருமே இல்லை என்று தெரிந்து கொண்டதால் தலையைத் திருப்பி பின்னால் இருக்கிறவரின் முகத்தைப் பார்த்தான். அவரும் பதிலுக்கு சிரித்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :