அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

ஆசிரியர்: ஜி எஸ் எஸ்

Category வரலாறு
FormatPaperback
Pages 150
ISBN978-81-8476-598-4
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் போன்றவற்றை நாம் உலக அதிசயங்கள் என்கிறோம். மனிதனின் செயற்கறிய சிறந்த செயல்களும், அவனால் படைக்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த படைப்புகளும் அதிசயங்கள் என்றே அழைக்கப்பட்டுவருகின்றன. அறியப்படாத அதிசய ரகசியங்கள் உலகத்தில் இன்னும் எத்தனையோ உள்ளன & சிதம்பர ரகசியத்தைப்போல. ஆனால், சில ரகசியங்கள் ஆண்டுகள் பல கடந்து வெளியாகியிருக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் பல்வேறு மர்மங்கள் புதைந்திருக்கின்றன. புகழ்பெற்ற மனிதர்களுக்குப் பின்னே ரகசியங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. மாவீரன் நெப்போலியனின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன? அவன் மரணத்தின் மர்மம் என்ன? காலத்தை வென்று நிற்கும் கல்லறைகளான பிரமிடுகளில் ஒளிந்திருப்பவை எவை? சீனப் பெரும் சுவர் சொல்லும் கதை என்ன? விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியம் எப்படிப்பட்டது? மூக்கின் மேல் விரலை வைக்கும் அதிசயங்களின் ரகசியங்களை இந்த நூலில் போட்டு உடைத்திருக்கிறார் நூல் ஆசிரியர். பொது அறிவுப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை படியுங்கள்.மர்மங்கள் சூழ்ந்த அதிசய உலகின் ரகசிய தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்களும் அதிசயம் அடைவீர்கள்.

இப்படி ஒரு நூலை எழுதலாமே என்று விகடன் பிரசுரத்திடமிருந்து ஆலோசனை வந்தபோது சில நாட்கள் அவகாசம் கேட்டேன். ஒரு நூல் அளவுக்கு இதற்கான விஷயங்களைச் சேகரிக்க முடியுமா என்பது முக்கியக் காரணம். ஆனால், பல்வேறு நூல்களையும், வலைத் தளங்களையும் இது தொடர்பாக அணுகிய போது மிகுந்த திகைப்பு ஏற்பட்டது. நாம் நன்கு அறிந்த பல விஷயங்கள் கேள்விகளுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றன. 'போகிறபோக்கில் இப்படி எதையாவது பரபரப்புக்காகச் சொல்லியிருக்கக்கூடும்' என்று வைத்துக் கொண்டால்கூட, சில ரகசியங்கள் எழுப்பும் கேள்விகள் மனதை அசைத்துப் பார்க்கின்றன.

ஜி.எஸ்.எஸ். மற்றும் அருண் சரண்யா ஆகிய பெயர்களில் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும் திரு. ஜி.எஸ்.சுப்ரமணியன் விருப்ப ஒய்வு பெற்ற வங்கி ஊழியர். பல முன்னணி' கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், கல்வி, நிறுவனங்களுக்கும் மனிதவளப் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜி எஸ் எஸ் :

வரலாறு :

விகடன் பிரசுரம் :