அண்ணா உதிர்த்த முத்துக்கள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம், அனைத்திலும் அண்ணாவின் உரை முழக்கத்தைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தனர் போன்றினர், புகழ்ந்தனர்.
முல்லைப் பதிப்பகத்துக்கு அவ்வப்போது அண்ணா வருகை புரிவார். அவரைக் காண தோழர்கள் பலரும் வருவார்கள். அது ஒரு பொற்காலம் என்றே கருதி மகிழ்கிறேன்.
மேடையில் மட்டும் அல்லாது, நண்பர் களிடையே பேசும்பொழுதுகூட நகைச்சுவையும் கருத்துச் செறிவும் இழையோடுவதைப் பலமுறை ரசித்து இன்புற்றிருக்கிறேன்.
ஆனால் அவற்றை முழுவதும் குறிப்பெடுத்து வைத்திருந்தால், ஆயிரம் முத்துக்களுக்கு மேல் கிடைத்திருக்குமே. அதை நினைக்கும்போது வருத்தம் மேலிடுகிறது.
எனினும், ஒரு சிலவற்றையாவது தொகுக்க முடிந்ததே என நினைத்து ஆறுதல் அடைகின்றேன்.
நான், உடனிருந்து கேட்டவை, எஸ்.வி.லிங்கம் கூறியவை, பத்திரிகைகளில் வெளிவந்தவை மற்றும் சட்டமன்றப் பேச்சுக்கள் ஆகியவற்றை இத்தொகுப்பில் இணைத்துள்ளேன். வாசகர்களுக்கு இது சுவைமிக்க விருந்தாகும்.

முல்லை பிஎல்.முத்தையா.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சுயமுன்னேற்றம் :

கௌரா பதிப்பக குழுமம் :