அண்ணாவின் அமுதமொழிகள்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category பகுத்தறிவு
FormatPaperback
Pages 80
ISBN978-93-80220-81-9
Weight100 grams
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிஞர் அண்ணாவின் அமுதமொழிகள் மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, குழந்தைகளுக்குத் தாயிடம் பாசம் ஏற்படுகிறது!
தமிழரின் ஏடுகளிலெல்லாம் இன்று தமிழர் திருநாள் பற்றிய திருமுகங்கள் காண்கிறோம். ஒன்று கூடும் வேளை! ஆம் ஒன்று கூடவேண்டிய கட்டம்! திரை, நைந்து இருக்கிறது. திரை நிச்சயம் கிழிந்து விடும்! தமிழருக்குள் காணப்படும் உட்பகை, ஒழிந்து கடும் விடுதலை வெற்றி விழாவுக்கு வழி ஏற்பட்டுவிடும்!
வாழ்க்கைத் துறையிலே மிக முக்கியமான - ரசமான கட்டம், காதல்!
கள்ளங்கபடமற்று விளையாடும் இளைஞனைக் காணும் கபட நெஞ்சங் கொண்ட வயது வந்த நொண்டி, தான் விளையாட முடியாமலிருக்கும் போது அவ்விளைஞன் மட்டும் விளையாடுவதா என்று பொறாமையுள்ளங் கொண்டு கல்லெடுத்தெறிந்து இளைஞனின் காலில் படுகாய முண்டாக்க நினைப்பது என்பது சாதாரணமாக நடைமுறைப் பழக்கத்தில் சில இழிகுணம் படைத்தோரிடத்து இருக்கக் காண்கிறோம். அடிபடும் இளைஞன் காயத்தைத் தேற்றிக் கொண்டு நடமாடுவது போல், திராவிட நாடும் தன்மேல் உதிர்க்கப்படும் அடக்கு முறைக் குண்டுகளைத் தாங்கிக் கொண்டு, தன் இலட்சியப் பாதையில் சளைக்காமல் செல்லவே விரும்புகிறது!

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

பகுத்தறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :