அண்டசராசரம்
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1215-8178-0083-2977
{1215-8178-0083-2977 [{புத்தகம் பற்றி இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்துகொண்டே வருகிறது. பலகோடி மதிப்புள்ள அந்தப் பணமும் நகைகளும் எங்கே போயின என்பதைத் தேடி அலைகிறது ஒரு கூட்டம். அண்டசராசரம் என்பது அந்தப் பணமிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான ரகசிய சொல், நேதாஜி விட்டுச்சென்ற பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சாத்யாகி என்ற கிழவரும், திப்பு என்ற பதினான்கு வயது சிறுவனும் முனைகிறார்கள். அவர்கள் இருவரின் விநோத துப்பறியும் முறைகளும், அதன் விளைவுகளும் வேடிக்கையானவை. இந்தத் தேடுதலின் ஊடாக அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பு பற்றியும் மதுரையில் வாழும் முன்னாள் ஐஎன்ஏ வீரர்கள் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள். இந்திய தேசிய ராணுவம் குறித்துச் சிறார்கள் அறிந்து கொள்ளும்படியாகத் துப்பறியும் கதையாக எழுதப்பட்ட நாவலிது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866