அணுக்குண்டும் அவரை விதைகளும்

ஆசிரியர்: பாமயன்

Category அரசியல்
Publication தமிழினி
FormatPaperback
Pages 144
First EditionJan 2008
$3.5      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பாமயன் என அழைக்கப்படும் மு, பாலசுப்பிரமணியன் 'நேயம்' என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் தனது பொது வாழ்வைத் தொடங்கியவர். குமுகாயப் பணியாளராக விருதுநகர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு புதிய குமுகச் சோதனைகளைச் செய்து பட்டறிவு பெற்றவர். ' சுற்றுச்சூழலளாராக தமிழகம் முழுவதும் இயங்கியவர். புதிய கல்வி இதழின் பொறுப்பாளராக சிலகாலம் ! பணியாற்றியவர். இதுவரை ஏறத்தாழ 150 கட்டுரைகளை தினமணி மற்றும் பல இதழ்களில் எழுதியவர். பல்வேறு நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதினை தமிழக மொழிபெயர்ப்பாளர் சங்கத்தினரால் பெற்றவர். தமிழில் துறைச்சொற்கள் எண்ணற்றவற்றை ஆக்கி அளித்தவர். சங்க காலத்தின் நீட்சியாக தமிழருக்கென்று சாதி, சமயமற்ற ஒரு குமுகத்தை அவர்தம் திணையியப் பகுப்பை அடியாகக்கொண்டு திணையவியல் என்னும் குமுகவியலை முன்மொழியும் அறிஞர்களுள் இவரும் ஒருவர். தற்பொழுது தமிழகத்தின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டை 'தாளாண்மை வேளாண்மை என வடிவமைத்து தாளாண்மை உழவர்இயக்கத்தின் வழியாகப் பரப்பி வருபவர். அவ்வியக்கத்தின். செயலாளர். தாளாண்மை இதழின் ஆசிரியர். 'பூவும் பொதியும்' என்னும் கவிதைத் தொகுப்பு தொடங்கி, இந்நால் ஈறாக இவரது படைப்புகள் இலக்கியம், சூழலியல் சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை.

உங்கள் கருத்துக்களை பகிர :