அணங்கு

ஆசிரியர்: அருண்பாண்டியன் மனோகரன்

Category நாவல்கள்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 152
ISBN978-93-90811-21-2
Weight200 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நட்பின் உச்சத்தில் எச்சிலின் சுவையறிந்து, உயிர்ப்பின் இரகசியம் மறைத்த, பிசுப்பிசுத்த நிணநீர் ஒழுகும் யோனியின் மனம் வீசும் மூத்திரம், உப்புகரிக்கும் இரத்த வாடையும் கோரைப் பல்லிடுக்கில் துடிக்கும் சதையுமாக வாழ்வா? சாவா? என்று தொடரும் பேரச்சத்தினூடாக மானுட உரிமையைப் பேசுகிறது அணங்கு எனும் இந்நாவல்,
சமூக இலக்கியத் தடத்தில் அவசியமானதொரு படைப்பாகவே நான் இந்நூலைக் கருதுகிறேன். காரணம் இந்தியாவில் காலங்காலமாக சமூகவியலை, அதன் சிக்கலை, அதன் சமமற்ற வளர்ச்சிப்போக்கை விதவிதமான கலாச்சார கரைசலை ஊற்றி உலகின் பொதுப் பார்வையிலிருந்து மறைத்து மானுடப் பண்பும், கலாச்சாரமுமற்ற மானுடப் பண்புக்கு முரணான பாரம்பரியங்களை உயர்த்திப் பிடிக்கிற நிகழ்கால சமூகச்சூழலில் அணங்கு போன்ற படைப்புகள் அவசியமாகப்படுகிறது. கவித்துவமும் கருத்தும் செறிவுமாக அணங்கு தலைப்பில் தொடங்கி ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவினுறும் மொழிநடையில் ஆக்கப்பட்டது சிறப்பு. வாசகர் கதைக்குள் நேரடியாக களமிறங்கி கதாபாத்திரங்களில் பலவித அனுபவங்களுடன் பயணித்து இறுதியில் ஓரிடத்தில் திகைத்து நிற்கக்கூடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

எதிர் வெளியீடு :