அடுத்து என்ன?
ஆசிரியர்:
க்ஷிப்ரா
விலை ரூ.360
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F?id=1479-9375-4817-0986
{1479-9375-4817-0986 [{புத்தகம் பற்றி காலை ஏழு மணி போல் சென்னையிலிருந்து பறப்பட்டிருந்தனர். இப்போது, மாலை ஐந்து மணி. அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் அரைமணி நேரம் ஆகும். காரினுள் இருந்த மூன்று பேரும் தேவைக்காகப் பேசியதோடு சரி. ஏஸியின் ஓசையைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. அந்த வண்டியை அமைதி கைப்பற்றியிருந்தது. முன்புறம், டிரைவருக்கு அடுத்து அமர்ந்திருந்த வயதான ஆண், அவரது தலையைப் பல கோணங்களிலும் சாய்த்துப் பார்த்து, கடந்த ஏழு மணி நேரமாக தூங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். சில வருடங்களாக, தூக்கம் அவரைக் கைவிட்ட நிலையில், அந்தக் கார் பயணத்தில் அதைத் திரும்பப் பெற முயன்று கொண்டிருந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண்மணியும் இளம் பெண்ணும் அவரவர் ஃபோனுடன் உறவாடிக் கொண்டிருந்தனர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866