அஞ்சாதே அஞ்சு

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
Publication RK பப்ளிஷிங்
FormatPaperpack
Pages 273
ISBN978-81-949075-1-0
Weight200 grams
₹230.00 ₹207.00    You Save ₹23
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முகம் பூராவும், ரத்தமாய் சிவந்து போயிருக்க, பற்களைக் கடித்துக் கொண்டு, ஆணிகள் பதிக்கப் பெற்ற பூட்ஸ் காலால் மிதித்ததும், போராடிப் பார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் உயிர்விட ஆரம்பித்தாள் அவள். மூச்சடங்கிப் போய், விழிகள் நிலைகுத்தியதும், கழுத்தின் மேலிருந்த தன் பூட்ஸ் காலைத் தளர்த்தினான் அவன். வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு, மறுபடியும் தன் பார்வையைச் சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தான். கண்களுக்கு எந்த மனித அசைவும் தட்டுப்படாமல் போகவே, அவளைச் சட்டென்று இரண்டு கைகளாலும் தூக்கிக் கொண்டு, அந்த மலைச்சரிவின் விளிம்பைத் தொட்டான், கீழே எட்டிப் பார்க்க, கூர்கூராய் நீட்டிக் கொண்டிருந்த பாறைகளோடு, அதளபாதாளம் தெரிந்தது. கீழே விழும் உடலைப் பொறுக்கி எடுக்க போலீசாலும் போக முடியாது. அவளைச் சரிவில் உருட்டினான். அவள் உருண்டாள். பாறையின் நீட்டல்களில் அடிபட்டு, அடிபட்டு ரத்த நிறமாய்க் கீழே போனாள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

RK பப்ளிஷிங் :