அச்சம் தவிர்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here'ஆயுதம் செய்வோம்' என்று பாடிய பாரதி அடுத்து 'காகிதம் செய்வோம்' என்றான். உண்மையில் நல்ல காகிதம் ஒவ்வொன்றுமே ஓர் ஆயுதம்தான். ஆம், பாரதியின் பாடல்கள் அச்சாகிய ஒவ்வொரு காகிதமும் ஆயுதம்தானே! அது ஆயுதம் இல்லையென்றால் பிரிட்டிஷ் அரசு அவர் பாடல்களை தடைசெய்திருக்குமா என்ன? - அந்தப் பாரதியின் அச்சமற்ற ஆன்மஞானத்தை அர்ப்பணிப்புடன் கொடுக்கும் இந்தப் புத்தகமும் இதன் காகிதமும் ஓர் ஆயுதம்தான். அச்சத்திற்கு எதிரான ஆயுதம்தான்.

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்” உலகம் யாரை அதிகம் கஷ்டப்படுத்துகிறதோ அவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக மாறி விடுகிறார்கள். கஷ்டத்தில் வலுப்படுகிற நம்பிக்கை, அசாத்தியமான நிலைக்கு அவர்களை உயர்த்தி விடுகிறது. இதற்கு மிகச் சரியான உதாரணம் மகாகவி பாரதி.
வறுமை, நோய், சமூக அமைப்பு, பிரிட்டிஷ் அடக்கு முறை, சொந்த மக்களின் சுயநல சோம்பல் வாழ்க்கை முறை, ஜாதியச் சிந்தனை, அறியாமையின் அராஜகம், இவை எல்லாம் பாரதியைப் பாடாய்ப் படுத்திய துயரங்கள், இத்தனைக்கு மத்தியிலும் துயரங்களைத் தூசுதட்டி விட்டு "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா'' என்று எழுச்சியுடன் எழுந்து நின்றவர் மகாகவி பாரதி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :