அகதியின் துயரம்

ஆசிரியர்: வி.சூரியநாராயணன்

Category கதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 133
First EditionMar 2021
ISBN9789390802890
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 1 x (D) 15 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த திருப்பங்களின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அகதியின் துயரங்களை இந்நூல் விவரிக்கின்றது.

உலக அகதிகள் நிலவரம், இந்தியா எதிர்கொண்ட அகதி அனுபவங்கள், இனப் பிரச்சினையால் உலகெங்கும் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள், இனங்களின் நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்கின்ற சிங்களவர்களின் போட்டி அரசியல் எனப் பல விடயங்கள் இந்நூலில் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.

இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட அனைத்து தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமைத் தேவைகளையும் இந்தியாவின் பாதுகாப்புக் கவனத்தையும் ஒருசேர உறுதிசெய்கின்ற ஒரு தேசிய அகதிகள் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் நூலாசிரியர் இந்நூலில் வலியுறுத்துகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :