ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை

ஆசிரியர்: மிக்கேயில் ஃபெரியே மொழிபெயர்ப்பு: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

Category கதைகள்
Publication தடாகம் வெளியீடு
FormatPaperback
Pages 260
ISBN978-81-932691-7-6
Weight300 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநிலநடுக்கம், சுனாமி, ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்காயேல் ஃபெரியே, தன் அனுபவங்களையும், அங்கு திரட்டிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் நூல் இது. மூன்று பகுதிகளாகப் பிரிந்து விரியும் இந்த நூலின் ஆசிரியர் அரசியலும் அழகியலும் இணைந்து அசாத்தியத் துணிவுடன் நிகழ்வுகளை விவரிக்கிறார். இயற்கை பேரிடர்களையும் மனிதர்களே தருவித்துக்கொள்ளும் பேராபத்துக்களையும் சமூகக் கடமையோடும் இலக்கிய ரசனையோடும் அணுகும் பனுவல் இது. நிலநடுக்கத்தால், சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களைச் சேகரித்துத் தருகிறார். துயரமும் அச்சமும் நெகிழ்ச்சியும் நிறைந்துள்ள அம்மக்களின் வாழ்நிலை நம்மை உலுக்கி விடுகிறது. அச்சுறுத்தும் அணு உலைகளை அனுமதித்தால் மக்களின் நிம்மதி எவ்வாறு அணுஅணுவாக அவர்களுடைய அரைகுறை வாழ்வில் சூறையாடப்படுகிறது என்பதை பாதிப்புக்குள்ளானவர்களின் மொழியிலேயே பதிவு செய்கிறார். வருங்கால சமூகத்தின்பால் அக்கறை கொண்ட எவரும் தவிர்க்க இயலா விவாதப் பொருட்களை தனித்துவமானதொரு மொழியில் அலசும் இலக்கிய ஆவணம்

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

தடாகம் வெளியீடு :