தலைவர்கள் தேவை

ஆசிரியர்: நா. சங்கர ராமன்

Category அரசியல்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 144
ISBN9788184468298
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முனைவர் நா. சங்கர ராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 13 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளையும், இலக்கியச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். நமது நம்பிக்கை, மாதவம், பரணி ஆகிய இதழ்களிலும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் வழங்கி வருகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன் ஆகியோர் பயின்ற பெருமைமிகு நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியிலே படித்தவர். அறிவியல் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்று தமிழ் மோகத்தால் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை தமிழிலே முடித்தவர்.
கல்லூரிக் காலங்களில் பொருநை என்ற மாணவ இதழை திறம்பட நடத்தி பலருடைய பாராட்டுக்களைப் பெற்றவர். பேச்சு, கவிதை, கட்டுரை போன்ற துறைகளிலும் சிறந்து விளங்கியவர். மாணவர் மத்தியில் நம்பிக்கை விதைகளை நாள்தோறும் தூவி வருபவர். உலக அளவில் இயங்கி வரும் எஸ்.எஸ்.எம். தமிழ் மரபு அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இயங்கி வருகிறார்.
தற்போது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலியில் உன்னாலும் முடியும், தமிழ் அறிவோம் என்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருகிறார். உலக அளவில் ஒலிபரப்பாகும் தமிழ்குஷி பண்பலையில் இலக்கிய நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அனைத்து ஊடக நிகழ்ச்சிகளில் பேசி வருபவர். உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள். நினைவுகள், வெற்றிகள் விற்பனைக்கு அல்ல, அறிவுரைகள் ஜாக்கிரதை, நம்பிக்கை நாட்காட்டி, அலாரத்தை எழுப்புங்கள், எண்ணுவது உயர்வு, என் பெயர் நம்பிக்கை ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் 'தலைவர்கள் தேவை' இவருடைய ஒன்பதாவது நூலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. சங்கர ராமன் :

அரசியல் :

விஜயா பதிப்பகம் :