என் பெயர் நம்பிக்கை
ஆசிரியர்:
முனைவர் நா. சங்கரராமன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%09%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?id=1456-9911-0917-4762
{1456-9911-0917-4762 [{புத்தகம் பற்றி முனைவர் நா. சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 12 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளையும், இலக்கியச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். நமது நம்பிக்கை , மாதவம், பரணி ஆகிய இதழ்களிலும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் வழங்கி வருகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன் ஆகியோர் பயின்ற பெருமைமிகு நெல்லை ம.தி.தா இந்துக் கல்லூரியிலே படித்தவர். அறிவியல் துறையில் இளம் அறிவியல் பட்டம்பெற்று தமிழ் மோகத்தால் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தைத் தமிழிலே முடித்தவர்.
<br/>கல்லூரிக் காலங்களில் பொருநை என்ற மாணவ இதழைத் திறம்பட நடத்தி பலருடைய பாராட்டுக்களைப் பெற்றவர். பேச்சு, கவிதை, கட்டுரை போன்ற துறைகளிலும் சிறந்து விளங்கியவர். மாணவர் மத்தியில் நம்பிக்கை விதைகளை நாள்தோறும் தூவி வருபவர்.
<br/>தற்போது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலியில் உன்னாலும் முடியும், தமிழ் அறிவோம் என்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருகிறார். உலக அளவில் ஒலிபரப்பாகும் தமிழ்குஷி பண்பலையில் இலக்கிய நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அனைத்து ஊடக நிகழ்ச்சிகளிலும் பேசி வருபவர். உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள், நினைவுகள், வெற்றிகள் விற்பனைக்கு அல்ல, அறிவுரைகள் ஜாக்கிரதை, நம்பிக்கை நாட்காட்டி, அலாரத்தை எழுப்புங்கள், எண்ணுவது உயர்வு ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் என் பெயர் நம்பிக்கை இவருடைய எட்டாவது நூலாகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866