வேலுப்பிள்ளை பிரபாகரன் மெய்நிகர் கண்காட்சி

வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17 அல்லது மே 18 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது . மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்
₹ 800  
பிரபாகரன்: ஒரு வாழ்க்கை
₹ 210  
பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
₹ 170  
ஆண்டகை
₹ 130  
மக்கள் திலகமும் மாவீரனும்
₹ 120  
போரும் சமாதானமும் 'தேசத்தின் குரல்'
₹ 500  
ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்
₹ 550  
ஈழ விடியல்
₹ 10  
மனிதனைத் தேடும் மனிதன்
₹ 150  
கூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்
₹ 250  
ஈழம் இன்று
₹ 95  
விடுதலைப் புலிகள்
₹ 200  
இலங்கையின் கொலைக்களம்: ஆவணப்பட சாட்சியம்
₹ 130  
ஆறிப்போன காயங்களின் வலி
₹ 230  
ஈழத்தில் இரு கிழமைகள்
₹ 60  
கிளிநொச்சி போர் நகரத்தின் கதை
₹ 50  
ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்
₹ 290  
ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்
₹ 100  
ஈழம் அமையும்
₹ 250  
விக்கிப்பீடியா: வேலுப்பிள்ளை பிரபாகரன்
பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.....Read more
மறக்க முடியாத பிரபாகரன்
1958 ஆம் ஆண்டிடு தமிழர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலை சிங்களர்கள் நடத்தினர். இந்த சம்பவங்களைக் கண்டு, கேட்டு, அறிந்த பிரபாகரன் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது......Read more
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் புதிய யுகமொன்றின் சிற்பி
தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களின் புதிய யுகமொன்றின் சிற்பி. விடுதலையின் பிரபை. தமிழ் இலக்கியங்கள் தமிழர் ஆன்மீகம் தேடுகின்ற தமிழர் பண்பாட்டின் மனித உரு. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்.......Read more
  • "விடுதலை என்ற இலட்சியத்தை இலகுவாக நாம் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறு தான் அதை எம்மிடம் கட்டாயமாக கையளித்தது.சுதந்நிரம் வேண்டுவதை தவிர வேறு எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை."
  • "மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திர சிற்பிகள், எமது மண்ணில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்..!"
  • "ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்."
  • "நாம் அரசியல்வாதிகளல்லர். நாம் புரட்சிவாதிகள்"
  • "பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்."