ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் மெய்நிகர் கண்காட்சி

பிரெட்ரிக் எங்கெல்சு (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; Friedrich Engels; நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.

ஆரம்ப வாழ்க்கை

இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் ஹேக்கல் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார். மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.

மார்க்சுடன் நட்பு

செர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். 1849-இல் செர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.

முதலாளித்துவத்தைப் பற்றி

முதலாளித்துவமானது‍ தொழிலாளிகளுக்கு‍ வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்‌க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது.

குடும்பம், தனிச்சொத்து ,அரசு, ஆகியவற்றின் தோற்றம்
₹ 150  
வரலாற்றில் முதலாளியமும் மதமும்
₹ 25  
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ்
₹ 25  
கற்பனவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்
₹ 70  
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் எங்கெல்ஸ்
₹ 150  
மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
₹ 30  
மார்க்ஸின் மூலதனம் பற்றி
₹ 70  
இயற்கையின் இயக்க இயல்
₹ 350  
டூரிங்குக்கு மறுப்பு
₹ 380  
மார்க்ஸ் - எங்கெல்ஸ் (வாழ்வும் - படைப்பும்)
₹ 175  
மார்க்ஸ்-எங்கெல்ஸ்-மார்க்சியம்
₹ 150  
மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் பணியும்
₹ 30  
மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும்
₹ 160  
சமதர்ம அறிக்கை
₹ 15  
விக்கிப்பீடியா : ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்
கார்ல் மார்க்சின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர்....Read more
28.11.1820: கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள் இன்று!
மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.....Read more
கார்ல் மார்க்ஸின் உடலைப் புதைக்கின்றபோது எங்கெல்ஸ் ஆற்றிய உரை..
காரல் மார்ஸின் உடலைப் புதைக்கின்றபோது, மார்க்ஸின் ஆகச்சிறந்த நண்பரும், அவருன் இணைந்து பணியாற்றி நட்பிற்கு தலைசிறந்த எடுக்காட்டாகத் திகழும் பிரடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய உரை,....Read more
இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூல்..
பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய, "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றி, இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும்....Read more
  • "சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே. உழைப்புதான் மனிதனையே உருவாக்கியது."
  • "மணவாழ்க்கையில் உரிமைகள், கடமைகள் விசயத்தில் இருதரப்பினரும் சமநிலையிலிருக்க வேண்டும் இவ்விரு கோரிக்கைகளும் முரணில்லாமல் நிறைவேற்றப்பட்டால் பெண் கேட்கக்கூடிய அனைத்தும் கிடைத்துவிடும் ..."
  • "எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்."
  • "கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய அறிவாகும்."