Buy Above Rs.500 Get 5% Off. Buy Above Rs.1000 Get 10% Off.

சார்லஸ் டார்வின் மெய்நிகர் புத்தகக் கண்காட்சி

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.

சார்லஸ் டார்வின் சுயசரிதை
₹ 50  
சார்லஸ் டார்வின் சுயசரிதம்
₹ 50  
சார்லஸ் டார்வின்
₹ 15  
சிந்தனையாளர் டார்வின்
₹ 32  
ஸர் ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின், தாமஸ் எடிசன்
₹ 50  
சார்லஸ் டார்வின் (நாடகம்)
₹ 25  
டார்வின்
₹ 110  
பீகிள் கடற்பயணம்
₹ 475  
சார்லஸ் டார்வின்
₹ 70  
விக்கிப்பீடியா : சார்லஸ் டார்வின்
டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.....Read more
நாம் எப்படித் தோன்றினோம்?: சார்லஸ் டார்வின்
மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் அப்படீங்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு வந்தது இயல்புதானே. 19-ம் நூற்றாண்டு வரைக்கும் பலருக்கும் இதுக்குத் துல்லியமான பதில் கிடைக்கல. 19-ம் நூற்றாண்டுல பிரிட்டன்ல உள்ள ஷ்ரூஸ்பரிங்கிற இடத்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின்தான் இதுக்குத் திட்டவட்டமான பதிலைக் கண்டுபிடிச்சார்......Read more
சார்லஸ் ராபர்ட் டார்வின்
உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக்கொண்டு இருந்தபொழுது இல்லை , “இது தவறு !” என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது டார்வினிடம் இருந்தது. சிறுவனாக இருக்கிற பொழுது பள்ளிக்கூடம் போகாமல் பெரும்பாலும் ஊர் சுற்ற போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்து கொண்டிருந்தார்......Read more
டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்
இந்த உலகின் உயிரினங்கள் யாரால் எப்படி தோன்றின, ஏன் மாறின போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான பதில்களை கண்டுபிடித்து மதங்களின் பிடியில் இருந்து அறிவை விடுதலை செய்த ஒரு அறிவியலாளனின் சாதனையை படியுங்கள்!.....Read more