சேமிப்பு_முதலீடு தகவல் களஞ்சியம்

ஆசிரியர்: சி.சரவணன்

Category வணிகம்
Publication விகடன் பிரசுரம்
Book FormatPaperback
Pages 255
First EditionOct 2008
7th EditionJul 2016
ISBN978-81-8476-145-0
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$6       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

பணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி பணம் கொழிக்கும் துறைகளில் முதலீடு செய்து பணத்தை பெருக்கவேண்டும் என்று விரும்பினாலும் அவை குறித்து பலருக்குத் தயக்கமும் இருக்கிறது. அப்படிப்பட்ட தயக்கங்களைப் போக்கும் பணியை இந்தப் புத்தகம் செய்யும். சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை என்ற தாரக மந்திரத்துக்கான கருவிகளைப் பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு எல்.கே.ஜி. (லேனர்ஸ் நாலேட்ஜ் கைட்) ஆக இருக்கும். அதேசமயம், ஏற்கெனவே தெரிந்து கரைகண்டவர்களுக்கு மேலும் பலமூட்டி வளமூட்டும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் இருக்கும்


உங்கள் கருத்துக்களை பகிர :