இஸ்லாமும் அறிவியலும்

ஆசிரியர்: எம்.எஸ்.எம். அனஸ்

Category இஸ்லாம்
Publication இலக்கியச்சோலை பதிப்பகம்
Formatpapper back
Pages 264
First EditionDec 2018
ISBN978-81-936643-3-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$7.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மதங்கள் நிறுவனமயமாகி பகுத்தறிவுக்கு எதிராக நின்றது போல, அறிவியல் நிறுவனமாகி முதலாளிகளின் உடைமைப் பொருளாகியுள்ளது.இந்தச் சட்டகத்திற்குள் நின்று மேற்கத்திய மற்றும் கீழைத்தேய விஞ்ஞான - மெய்யியல் வளர்ச்சி இந்த நூலில் விரிவாக பேசப்பட்டுள்ளது.ஐரோப்பிய மையவாதப் பின்னணியிலேயே மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற பொதுப்புத்தி ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. ஐரோப்பாவுக்கு வெளியே ஆஃப்ரிக்காவும் அரேபியாவும் விஞ்ஞான மெய்யியல் துறைகளில் பங்களிப்பு செய்துள்ளதுஅறிவுசார்துறைகளில்கண்டுகொள்ளப்பட்டதேயில்லை. அந்தப் பங்களிப்புகளை காணும் விழிப்பு தொடங்கும் புள்ளியில் இஸ்லாம் அறிவியலுக்கு எதிரான மதம் கிடையாது என்று துலக்கமாகப் புலப்படும்.
மதங்களின் மூட நம்பிக்கைகளுக்கு சாவுமணி அடித்து, விஞ் ஞான யுகம் பிறக்கும் போது, அதனை மதங்கள் எப்படி எதிர்கொண்டன? மதங்கள் நிறுவனமயமான பின், பகுத்தறிவை அது பின்னுக்குத்தள்ளியதை அடுத்து, அறிஞர்கள் மதங்களுக்கு எதிராக நின்றனர். அதேசமயம், அறிவியல் நிறுவனமாகும் போது, முதலாளிகளின் உடைமைப் பொருளாக அறிவியல் மாறுவதையும் மறுப்பதற் கில்லை. இந்தச் சட்டகத்திற்குள் நின்று மேற்கத்திய மற்றும் கீழைத்தேய விஞ்ஞானமெய்யியல் வளர்ச்சி இந்த நூலில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :