அமானுஷ்ய நிஜங்கள்

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category மனோதத்துவம்
Publication DK Publishers
FormatPaper Pack
Pages 160
First EditionAug 2018
ISBN978-93-87378-76-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இயற்கையின் பஞ்சபூத குணங்களை மனிதன் எப்படி கட்டுப்படுத்த முடியாதோ அதுபோல்தான் பேய் பிசாசுகள் எனப்படும் ஆவிகள். ஆவிகள் உண்டா இல்லையா என்பது இன்றுவரை ஆய்வுக்குரிய தலைப்பாக இருந்தாலும், அவை உண்டு என்பது ஆசிரியருடைய அனுபவம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இதைப் பார்த்து மிரண்டுபோன தருணங்களும் உண்டு. மனப்பிராந்தியால் வரும் உருவங்களே இது என்று பொதுவாகச் சொல்லி ஏற்காமல் போவார்கள். ஆசை நிறைவேறாமல் இறந்தவர்களும், அகாலத்தில் மரணித்தவர்களும் பெரும்பாலும் இப்படி ஆவியாக உருவெடுத்துத் திரிகிறார்கள். இது எல்லோர் கண்களுக்கும் தெரிவதி ல்லை. நல்ல ஆண்மாக்கள் எப்போதும் கெட்ட ஆவிகளைப் போல் திரிந்து கொண்டு இருக்காது. வேண்டிய நேரத்தில் மட்டுமே அது வழிநடத்தி ஆசிர்வதிக்கும். அதுபோல் ஏவல் பில்லி சூனியம் என்ற கருதொழில் மாந்தி ரீகங்களும் உண்டு. அதையும் மறுப்போர் உண்டு. சித்த நூல்களில் இதைப்பற்றிய மேற்கோள் உள்ளது. ஆவியை கண்ணால் காணமுடியும் போது, கடவுளை ஏன் காணமுடிவதில்லை என்று நீங்கள் நினைக்கலாம். கொடுப்பினை இருப்பின் கடவுளை, சித்தர்களை, மகான்களைக்கூட தரிசிக்க முடியும் என்று தன் சுய அனுபவத்தில் கூறுகிறார். இதுவரை ஆன்மீகம், சித்தர்கள், மேலாண்மை , சுயமுன்னேற்றம், ஏற்றுமதி, ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் திரு. எஸ். சந்திரசேகர் நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் இந்த பேராநார்மல் அமானுஷ்ய நாவல் வித்தியாசமானது.

உங்கள் கருத்துக்களை பகிர :