தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், 2010

ஆசிரியர்: ஜெய.கார்த்திகேயன்

Category சமூகம்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 56
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

கடந்த சில ஆண்டுகளில் தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாகவும், வேகமான நகரமயமாதலாலும் நம்முடைய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களிலும், இதர அதிகார அமைப்புகளின் முன்பும் சுற்றுச் சூழல் சார்ந்த வழக்குகள் கணிசமான அளவு நிலுவையில் உள்ளன. ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளின் காரணமாக, மனிதனின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம், கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவை சார்பில் 1972 ஆம் ஆண்டு, ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழல் (human environment) மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டு, மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்பாட்டுக்கு சரியான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒப்புக்கொண்டுள்ளது. ஏனென்றால், 1992ஆம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டது. மாசுக்கட்டுப்பாடு மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புறுதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு வேண்டிய தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்து, தீர்வு காணத் தேவையான நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை உருவாக்கித் தர வேண்டும் என அதில் கலந்துகொண்ட நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :