இந்துமதத் தத்துவம்

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category தத்துவம்
Publication புதிய ஜனநாயகம்
FormatPaperback
Pages 204
First EditionApr 1995
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$3.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்நூலிலிருந்து... '... சாதியமைப்பை விவரித்த முன்னோடி என்ற நிலையில் மனு சாதிகள் எப்படி தோன்றின என்பதையும் கூறுகிறார். எனவே, மனு கூறும் சாதியமைப்பின் தோற்றம்தான் என்ன? இதற்கான அவரது விளக்கம் மிக எளிமையானது. நாற்பெரும் வருணங்களைத் தவிர்த்த மீதி சாதிகள் கீழானவை. நாற்பெரும் மூலச் சாதிகளைச் சேர்ந்த ஆண், பெண்களின் கூடா ஒழுக்கத்திலிருந்து உருவானவையே இந்த சாதிகள். நாற்பெரும் மூலச் சாதிகளைச் சார்ந்த ஆண், பெண்களிடையே நிலவிய பரவலான ஒழுக்கக்கேடுகளும் நடத்தைப் பிறழ்வுகளும் எண்ணற்ற சாதிகள் உருவாக வழிவகுத்தன; இத்தகைய சாதி, மக்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகக் காரணமாயின. நாற்பெருஞ் சாதி ஆடவர் - பெண்டிரின்பால் - எத்தகைய பழியைச் சுமத்துகிறோம் என்பதைச் சிறிதேனும் பொருட்படுத்தாமலேயே அவர்கள் ஒழுக்கத்தின்பால் குற்றஞ் சுமத்துகிறார் மனு. குறிப்பாக, சண்டாளர் எனப்பட்ட தீண்டப்படாத சாதி மக்கள் பிராமணப் பெண்ணுக்கும், சூத்திர ஆடவனுக்கும் பிறந்த மக்கள். இதன்படி பார்க்கும்போது சண்டாளர்கள் எண்ணற்றவர்களாக இருப்பதால், ஒவ்வொரு சூத்திர பிராமணப் பெண்ணும் ஒழுக்கங்கெட்டவளாக, பரத்தையாக இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. இதேபோல் ஒவ்வொரு சூத்திர ஆடவனும் சோரம் போனவனாக இருந்திருக்க வேண்டும். ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்குள் யாருமே இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, மனு பல்வேறு சாதிகளின் தோற்றத்துக்குக் கூறும் மதிகேடான பழி சுமத்தல் வரலாற்றுண்மைகளைத் திரித்துக் கூறலாகவே அமைகிறது."

உங்கள் கருத்துக்களை பகிர :