அறிமுகக் கையேடு: தட்டான்கள், ஊசித்தட்டான்கள்

ஆசிரியர்: ஜெகநாதன் ஆர்.பானுமதி

Category
Publication க்ரியா
Book FormatPaperback
Pages N/A
$12.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”.
இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டான்களைக் குறித்த விளக்கங்களையும், 203 வண்ணப் புகைப்படங்களையும் கொண்டுள்ள இக்கையேடு சிறுவர்கள், காட்டுயிரியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மொழியியலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும்படி எளிய தமிழிலும், கள ஆய்வுக்கு எடுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பது இக்கையேட்டின் சிறப்பு..
தட்டான்களின் தனித்துவமான இயல்புகளை அவற்றின் புகைப்படங்களுடன் விவரிக்கும் இந்த நூல் தட்டான்களைப் பற்றி கள ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் உதவும்.
நவீன தொழில்நுட்பங்களாலும், மாறிவரும் மனிதச் செயல்பாடுகளாலும் அழிந்துவரும் நிலையிலுள்ள சில அரிய வகை தட்டான்களைப் பாதுகாக்கவும், அவற்றின் இனங்களைப் பெருகச் செய்யவும் இக்கையேடு சில செயல்முறைகளைப் பரிந்துரைக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :