தாய் மண்ணே வணக்கம்

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
Book FormatPaper Back
Pages 124
First EditionNov 2013
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி அப்படி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிடமுடியும். மெய்தான். இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன. ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிக சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும் எண்ணிக்கையில் ஆனந்தமாய் இருப்பவர்கள்; வாழ்வே நீங்கள்தான் நீங்கள் ஒன்றுபட்டால் உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்துவிடலாம். இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி அடக்கிவைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணறவைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்துவிடலாம். வறுமையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக்கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்.

ஆகவே விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :