நவம்பர் 8, 2016

ஆசிரியர்: எஸ்.அர்ஷியா

Category நாவல்கள்
Publication எதிர் வெளியீடு
Book FormatPaperback
Pages 104
First EditionDec 2016
ISBN978-93-84646-99-8
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90 ₹81    You Save ₹9
(10% OFF)


தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

நள்ளிரவில் சுதந்திரம்பெற்ற இந்தியா, எத்தனையோ துன்ப இரவுகளைக் கடந்திருந்தாலும் நவம்பர் 8, 2016 - ன் முன்னிரவு, சூதுகளால் சூழ்ந்த இரவாகிப் போனதுதான் நவீனயுகத்தின் கொடூரம். 134 கோடி மக்கள் தொகையில் மிகச்சொற்ப சதவீதத்தினர்
கைக்கொண்டிருக்கும் கள்ளப்பணம், கறுப்புப்பணம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவிப் புழங்கவிட்டப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி, சாமான்ய மக்களை அல்லாடவிட்ட துயரம் பசி, பஞ்சம், பட்டினிக் காலத்திலும் இல்லாதது.கறுப்புப்பண ஒழிப்பை எல்லாத்தரப்பும் மகோன்னதமாய் வரவேற்கவே செய்கின்றது.

விரிந்த முன்னேற்பாட்டுத் திட்டங்கள் ஏதுமின்றி, மனித உழைப்பு நேரத்தை வீணடித்து, அன்றாடத்தைத் துவளச்செய்யும் போக்கினை பொருளாதாரச் சீர்திருத்தம் என, தூய பிம்பக் காட்சிகளாய் அரசு செயற்கையாய்க் கட்டமைத்து வருகின்றது.

அரசின் ‘மௌடீக' தேசபக்தி முகமூடி, அன்றாடம் நடக்கும் காட்சிகளால் அம்பலப்பட்டு வருவதை இந்நூல் படம் பிடிக்கின்றது.


Review