40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

குலேபகாவலி

ஆசிரியர்: ஆத்மார்த்தி
Category சிறுகதைகள்
Publication யாவரும் நலம் பப்ளிஷர்ஸ்
Book FormatPaperback
Pages N/A
First EditionJan 2017
₹120      

Description

அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே இல்லை. இன்னும் வந்த வழியிலேயே மழை தீர்ந்து போகும் வரை அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தான். மழையின் கட்டுப்பாட்டிற்குள் சகலமும் வந்து விட்டாற்போல் தோன்றியது கண் திறந்தான்.
கொட்டுமேளச் சத்தத்தோடு உற்சவர் வந்துகொண்டிருந்தார்.


Review