ஐந்தும் மூன்றும் ஒன்பது

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category நாவல்கள்
Publication சூரியன் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 392
First EditionApr 2016
ISBN978-93-85118-61-6
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
$10.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

திரு. இந்திரா சௌந்தர்ராஜன் ஒரு பன்முகப் பரிமாண எழுத்தாளர் ஆவார். பல விருதுகளைப் பெற்ற இவரது எழுத்துக்கள், சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் கூட மிகப் பிரபலம். இவரின் இந்த ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ என்கிற நாவல், ‘‘நாவல் இலக்கியத்தில் மிகுந்த தனித்தன்மை கொண்ட ஓர் ஆய்வுபூர்வமான படைப்பு’’ என்கிறார். ‘குங்குமம்’ இதழில் வெளியாகி, லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்த தொடர்கதையின் நாவல் வடிவம் இது!அடுத்த நிமிடமோ, அடுத்த நாளோ, அடுத்த வருடமோ, அடுத்த நூற்றாண்டோ... இந்த உலகில் என்னவெல்லாம் நிகழப்போகிறது என்பதைக் கணித்துச் சொல்லும் ‘காலப்பலகணி’ ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? அதைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள யார்தான் துடிக்க மாட்டார்கள்? அப்படி ஒரு தேடலை நோக்கிப் போகும் கதை இது! காலப் பலகணி இருப்பதாகவே வாசகர்கள் நம்பிவிடக்கூடும். ‘இப்படி ஒரு கருவி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்ற நினைப்பு இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் எழும்.அறிவியலின் தளத்தில் நின்று ஆன்மிகத்தைப் பார்ப்பதும், ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியலைப் பார்ப்பதும் இந்த நாவலின் ஸ்பெஷல். திடீர் திருப்பங்களும் வித்தியாச கதாபாத்திரங்களும் அவர்களின் உரையாடல்களும் உங்களை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். நாவலின் முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி பக்கம் வரை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில புத்தகங்களைக் கையில் எடுத்தால், கடைசி வரியைப் படிக்கும்வரை கீழே வைக்க மனம் வராது. ‘ஐந்தும் மூன்றும் ஒன்பது’ அப்படிப்பட்ட உணர்வை உங்களுக்குத் தரும்..


உங்கள் கருத்துக்களை பகிர :