40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

அறம் பொருள் இன்பம்

ஆசிரியர்: சாரு நிவேதிதா
Category நேர்காணல்கள்
Publication அந்திமழை
Pages 256
First EditionFeb 2016
ISBN978-81-92460-96-3
₹200      

Description

அந்திமழை இணையத்தில் வாரந்தோறும் வாசகர்களின் கேள்விகளுக்கு

எழுத்தாளர் சாருநிவேதிதாவின் அளித்த பதில்களின் தொகுப்பு.

கடைசியில் மரணம்தானே?

யார் சொன்னது? சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது

போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து

விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும்

சேர்கிறது.

பின்நவீனத்துவம் என்பதை இலகுவாய் எனக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவீர்?

(கத்தியில் கம்யூனிசத்துக்குக் கொடுக்கப்படும் விளக்கம் போல் என்றாலும் சரியே.)

பழைய வகை எழுத்து Fast Food. ஆற்றுக்குப் போய் தூண்டிலில் மீன் பிடித்து நாமே

சமைத்துச் சாப்பிடுவது பின்நவீனத்துவம்.புரிகிறது? ஃபாஸ்ட் ஃபூட் வகையில் நமக்கு

எந்த வேலையும் இல்லை. எல்லாம் அவர்களே. நாம் வெறுமனே அதை வாயில்

போட்டு மெல்ல வேண்டியதுதான். கிட்டத்தட்ட எருமையும் நாமும் ஒன்று.

எழுத்தாளன் கொடுக்கும் பிரதியை நீங்கள் வாசித்து, அதிலிருந்து உங்களுக்கான

பிரதியை உருவக்க வேண்டும். அதற்கான திறப்பும் அந்தப் பிரதியில் இருக்க

வேண்டும். கட்டாந்தரையில் மீன் பிடிக்க முடியாதே?


Review

Customers Who Viewed This Item Also Viewed