தமிழ்க் கடவுள்

ஆசிரியர்: கவிஞர் வாலி

Category ஆன்மிகம்
Publication வாலி பதிப்பகம்
FormatPaper back
Pages 144
First EditionJul 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அன்னைத் தமிழ், செம்மொழி அரியாசனம் ஏறிஅணிவிழாக் காண இருக்கும் இனிய தருணம் இது. அவள் நெற்றித்திலகத்தின் மேல்ஓர் உச்சித் திலகம்இட்டிருக்கிறார் கவிஞர் வாலி. ஆறுமுகப் பண்ணவனின் அருள் வரலாற்றை, ஏழு வண்ணம் குழைத்த கலவையாக்கி, ஆயிரம் பிறைகாண இருக்கும் கவிஞர் பெருந்தகை, தமிழ் மக்களுக்கெல்லாம் பழுத்த தன் தமிழ்ப் புலமையால் தமிழ் ஞான விருந்து படைத்துள்ளார். அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், இராமானுச காவியத்தையும் கண்டு ஏக்கற்றுக்கிடந்த சைவப் பெருமக்களுக்கு, சிறப்பாக, முருக பக்தர்களுக்குப் பழநி பஞ்சாமிர்தம் கிடைத்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் இந்தத் திருவரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர் நெஞ்சில் புகுந்த முருகன், எண்பது வயதில், கவிஞர் பேனா முனை வழியே புதிய அவதாரம் எடுத்திருக்கிறான். தமிழ்நாட்டுச் சைவர்களுக்கு, தாய்மாமன் வழி தங்கள் பிள்ளைக்கு ஒரு சீதனம் கிடைத்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி, அருணகிரிநாதர் கண்ட கனவு, வாலி வழி இன்று வசப்பட்டிருக்கிறது. கவிஞர் வாலி அவர்கள், இந்தக் காப்பியத்திற்கு, வேறு எந்த ஒரு பெயர் வைத்திருந்தாலும் நான் மகிழ்ந்திருக்கமாட்டேன். முருகன் அருள் வரலாற்றைக் கச்சியப்பர் “கந்தபுராணம்' எனப் பாடினார். சம்பந்த சரணாலயர் “கந்த புராணச் சுருக்கம்' எனச் சுட்டினார். குமரகுருபரரோ, தாம் செய்த குட்டிக் கந்த புராணத்திற்குக் 'கந்தர் கலிவெண்பா' என்று பெயர் நாட்டினார். மிகப் பொருத்தமாகக் கவிஞர் வாலி அவர்கள் 'தமிழ்க் கடவுள்' என்று பெயர் சூட்டியிருப்பது நீண்ட பல சிந்தனைகளை என்னுள் தோற்றுவித்தது. நிறைவில், இவன் கதைக்கு இதுவே சரியான தலைப்பு என்ற நிறைவும் பிறந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :