40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

டீன் - ஏஜ் பிரச்னைகள்

ஆசிரியர்: டாக்டர் ஷாலினி
Category உடல் நலம்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 136
₹70      

Out of Stock!


Description

டீன்-ஏஜ் வயதில் ஆண்-பெண் உடலில் ஏற்படும் இயல்பான பருவ மாற்றங்கள் என்னென்ன? பருவ வயதில் இருபாலரும் உடலளவில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி? எதிர்பாலினரின் மீது கிளர்ச்சி ஏற்படுவது ஏன்? வக்கிர எண்ணங்கள் ஏன் ஏற்படுகின்றன? தவறான செக்ஸ் உறவில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? சுய இன்பப் பழக்கம் ஆண்-பெண் இருவருக்கும் இயல்பான விஷயமா? - இப்படி இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வதுடன் உளவியல் பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் விளக்குகிறது இந்தப் புத்தகம்.நூலாசிரியர் டாக்டர் ஷாலினி, மன நல மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும், மகளிர் மனநலம் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் பெற்றவர். 'மனநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்' என்ற அமைப்பை நடத்திவரும் இவர், 'மைண்ட் ஃபோகஸ்' என்ற நிறுவனத்தின் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளை அளிக்கிறார். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.


Review