ஏர்டெல் மிட்டல்

ஆசிரியர்: என்.சொக்கன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 160
$3.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

நான் வழங்கும் மொபைல் சேவையைத்தான் எல்லோரும் பயன்படுத்தவேண்டும். நான் தயாரிக்கும் ஜெனரேட்டர்தான் எல்லோர் வீட்டிலும் இயங்கவேண்டும். இந்தியாவின் ஒவ்வோர் அங்குலத்திலும் என்னுடைய பெயர் அழுத்தம்திருத்தமாகப் பதியவேண்டும். பார்தி - ஏர்டெல் நிறுவனத்தின் பிதாமகனான சுனில் மிட்டலுக்கு வந்த கனவுகள் ஒவ்வொன்றும் பிரமாண்டமானவை. அத்தனையும் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா என்று எப்போதுமே தயங்கி நின்றதில்லை அவர். குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு, கடைநிலை வாடிக்கையாளரைக் கவர்வது சாத்தியமில்லை. தரையில் இறங்கி அவர்களை நெருங்கவேண்டும். உளப்பூர்வமாகத் தொட்டுப் பார்க்கவேண்டும். இந்த அணுகுமுறைதான், சுனில் மிட்டலை இந்தியத் தொலைத் தொடர்புத்துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக உருமாற்றிய தாரக மந்திரம். ஏர்டெல் என்ற அதிபிரமாண்டமான சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சுனில் பார்தி மிட்டல் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் பெருமைக்குரிய பதிவுகள்!


உங்கள் கருத்துக்களை பகிர :